பருப்பு உருண்டை குழம்பு

0
தேவையானவை:
  • துவரம்பருப்பு - கால் கப்
  • கடலைப்பருப்பு - முக்கால் கப்
  • பாசிப்பருப்பு - கால் கப்
  • பச்சரிசி - கால் கப்
  • சின்ன வெங்காயம்  - அரை கப்
  • பச்சை மிளகாய் -3
  • இஞ்சி - ஒரு துண்டு
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • மல்லித் தழை - ஒரு பிடி
  • கறிவேப்பில-சிறிதளவு
  • எலுமிச்சம்பழச் சாறு -  2 ஸ்பூன்
  • சோம்பு - ஒரு ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

        அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். அவற்றுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்தெடுங்கள். 
        அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுங்கள். 
        இந்த உருண்டையை குழம்பில் போடவும். பருப்பு உருண்டை குழம்பு ரெடி..
       வேகவைத்த உருண்டையுடன் காரச் சட்னியும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்

Post a Comment

0Comments
Post a Comment (0)