கோடைக்கால அழகுக் குறிப்புகள்

0
மற்ற எந்த நாட்களையும் விட கோடையில்தான் நமது சருமமும், கூந்தலும் அளவுக்கதிகமாக பாதிக்கப்படும். எனவே அவற்றுக்குப் பிரத்யேகக் கவனிப்பும், பராமரிப்பும் தேவை. மிக அதிக நேரம் வெயிலில் அலைபவர்களது சருமம் சீக்கிரமே முதுமைத் தோற்றத்தை அடையவும், சருமப் புற்று நோயால் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகமாம். வெயிலில் எங்கே செல்ல நேர்ந்தாலும் தலைக்குத் தொப்பி அணிந்து போவது பாதுகாப்பானது.

கோடையின் பாதிப்பைத் தடுக்க சில அழகுக் குறிப்புகள்  உங்களுக்காக....

ஃப்ரூட்  ஃபேஷியல் (Fruit facial)

ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, வாழைப்பழம் ஆகிய நான்கு பழங்களையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை நன்கு மசித்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் போதும். முகம் பளிச்சிடும். 

இதை செய்தால் முகம் பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும். 15 நாள்களுக்கு ஒருமுறை இதை முயற்சிக்கலாம்.

பொட்டுக்கடலை ஃபேஸ்பேக்


4 தேக்கரண்டி பொட்டுக்கடலைப் பொடியுடன் 3 தேக்கரண்டி தாழம்பூ தண்ணீர் அல்லது பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் "பளிச்' என்ற தோற்றம் கிடைக்கும்.

சருமம் பளிச்சிட

வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வந்தவுடன் 2 தேக்கரண்டி சமையல் சோடா, அரிசிமாவு, ஒரு தேக்கரண்டி அரைத்த எலுமிச்சைத் தோல் மூன்றையும் கலந்து முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடம் கழித்து ஒரு துணியால் மேல்நோக்கி துடைத்துவிடுங்கள். 



சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். சருமம் பளபளக்கும்.

சன் ஸ்க்ரின் லோஷன்

மேக்கப் போட ஆரம்பிப்ப தற்கு முன்பே சன் ஸ்க்ரின் லோஷன் அல்லது கிரிம் தடவ வும். வெயிலின் பாதிப்பைத் தடுக்க இது மிக முக்கியம். எந்த சன் ஸ்க்ரினை உபயோகித்தாலும் அதன் பலன் மூன்று மணி நேரத்திற்கு மேல் நீடிக்காது. எனவே மறுபடி தடவ வேண்டும். முகத் தில் மட்டும் என்றில்லாமல் உடலில் வெயில் படக்கூடிய எல்லா இடங்களிலும் அதைத் தடவிக் கொள்ள வேண்டும்.

மேக்கப் எச்சரிக்கை:

வெயிலின் சூடு காரண மாக நீங்கள் போட்டுக் கொள்கிற மேக்கப் வழியக் கூடும். இதைத் தடுக்க வாட்டர் ப்ரூஃப் மேக்கப் சாதனங்களை உபயோகிக்கலாம். முதலில் வாட்டர் ப்ரூஃப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் மேக்கப் போடுங்கள். இதனால் மேக் கப் வெயிலில் வழியாமல் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

கண்களில் கருவளையம் :

கண்களுக்கு கீழே ஏற்படும் கரு வளையம் முக அழகை கெடுப்பதுடன், வயதையும் கூட்டி காண்பிக்கும். தூக்கமின்மை கண்களில் ஒய்வின்மை, மனக் கவலை, உடல் சத்துக் குறைவு போன்ற பல காரணங்களை கூறினாலும் முக்கிய காரணம் கண்களை சுற்றியுள்ள தோலில் ஏற்படும் சுருக்கம்தான் கரு வளையத்திற்கு பிரதான காரணம்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதை தவிர்த்து கண்களுக்கு தேவையான ஓய்வு கொடுப்பதுடன் கருமை உண்டான பகுதியில் வெளுப்பாக்கும் க்ரீம் தடவியும், மசாஜ் செய்தும் இக்குறையை நிவர்த்தி செய்யலாம்.





Post a Comment

0Comments
Post a Comment (0)