காளான் பன்னீர் மசாலா குழம்பு

0
தேவையான பொருட்கள் :
  • காளான் – 3 கிராம்
  • வெங்காயம் – 3
  • தக்காளி – 3
  • இஞ்சி, பூண்டு விழுது – 3 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • பன்னீர் - 200 கிராம்
  • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  • கரம்மசாலாத்தூள் – 1 /2 ஸ்பூன்
  • கட்டித்தயிர் – 1 கப்
  • முந்திரிப்பருப்பு – 15
  • எண்ணெய்-தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
  • நறுக்கிய தக்காளி – 1 1/2 கப்
  • முந்திரிப் பருப்பு – 10



செய்முறை :

வெங்காயம், தக்காளியை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் அரிந்து கொள்ளவும்.   காளான்களை நன்கு கழுவி நறுக்கவும். பன்னீரை துண்டுகளாக்கவும்.

ஒரு பெரிய கடாயில்  சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் முந்திரிப் பருப்பு, பச்சை, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது இவற்றைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.


பின்பு தக்காளியையும், காளான்களையும் சேர்த்து சில நிமிடங்கள் கிளறிவிடவும். இத்துடன் அரைத்த மசாலாவையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு,  சேர்த்து கலக்கவும்.


கட்டித் தயிரை கடைந்து அதில் ஊற்றி, எண்ணெய் தனியே பிரிந்து வரும்வரை வதக்கவும். கடைசியாக பன்னீர் கட்டிகளை மெதுவாக அதில் போட்டு மேலும் இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். 


கொத்தமல்லித் தழையை மேலே தூவவும்..  

காளான் பன்னீர் மசாலா குழம்பு மனக்க மனக்க சுவைக்க தயார்...

Post a Comment

0Comments
Post a Comment (0)