⦿ புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
⦿ கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.
⦿ கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
⦿ டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.
⦿ சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை கால, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.
⦿ தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும்.
⦿ ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில் உடனே குடித்து வந்தால் தலைவலி குறையும்.
⦿ நெல்லிக்காயை அரை லிட்டர் சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைவலி குறையும்.