துளசி இலை.. அழகை கூட்டும் அற்புதம்.... எளிய வழிமுறைகள்...

0

மருத்துவத்திற்கு பயன்படும் துளசி இலை சரும பராமரிப்பு, பொடுகு பிரச்சனைகள், இளநரையை குணப்படுத்தும்.  துளசி மருத்துவத்திற்கு எவ்வளவு பயன்படுகிறதோ அதே அளவில் அழகு பராமரிப்பிற்கும் உதவுகிறது.




துளசி இலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்....

 

துளசி + ஆரஞ்ச் தோல் = முக பருக்கள் நீங்க

ஆரஞ்ச் தோல் முக அழகிற்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, முக பொலிவை தந்து முகப்பருக்களை நீக்கும். மேலும் துளசியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தில் உள்ள எண்ணெய் பசைகளை குறைக்க வல்லது.


துளசியுடன் காய்ந்த ஆரஞ்ச் தோலை நன்கு அரைத்து கொண்டு, முகத்தில் முகப்பருக்கள் உள்ள இடத்தில தடவவும். இவ்வாறு செய்தால் முக பருக்கள் விரைவில் குணமாகும். 


துளசி + முல்தானி மெட்டி = முகப்பொலிவு

10 துளசி இலைகளை எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து அதனுடன் 2 டீஸ்பூன் முல்தானி மட்டி சேர்த்து கலக்கவும். அதனுடன் ரோஸ் நீரை இதில் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 


20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்தால், முகம் பொலிவுடன் இருக்கும்.


துளசி + நெல்லிக்காய் = இளநரை போக்க 

15 துளசி இலையை நன்கு அரைத்து கொண்டு, அதனுடன் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை கலந்து கொள்ளவும். இவற்றுடன் ஆலிவ் எண்ணெய் 2 டீஸ்பூன் கலந்து தலைக்கு தடவுங்கள். 

2 மணி நேரத்திற்கு பிறகு தலையை லேசான சூடான நீரில் அலசினால், இளநரைகளை குணப்படுத்தலாம். மேலும் இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்யலாம். 


துளசி + முட்டை = சரும நிறம் அதிகரிக்க 

10 துளசி இலையை அரைத்து கொண்டு, அவற்றுடன் முட்டை வெள்ளை கருவை சேர்க்க வேண்டும். பிறகு இவை இரண்டையும் நன்றாக அடித்து கொண்டு, முகத்தில் தடவவும். 

இது முகத்தில் உள்ள கிருமிகளை நீக்கி, பொலிவு பெற செய்யும். மேலும் தோலை இறுக செய்யும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்க உதவும். 


துளசி + தயிர்  =  தழும்புகள் போக்க

சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும். 


இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு,  இனிமேல் பருக்கள் வராமலும் தடுக்கும்.  


துளசி ஃபேஸ் வாஷ்  = இளமை தோற்றம்

10-12 துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதித்த பின் இறக்கி, குளிர வைத்து, பின் முகத்தைக் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம், சருமம் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கும்.


துளசி + எலுமிச்சை  = எண்ணெய் பசைக்கு தீர்வு

ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும். 

இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. 


துளசி + சந்தன பவுடர் = சரும பொலிவு

10-12 துளசி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் சந்தன பொடியை போட்டு, அத்துடன் துளசி நீரை ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். 

இந்த ஃபேஸ் பேக் சரும பொலிவை அதிகரிக்க உதவும். 


துளசி + புதினா  = முகம் பிரகாசம்

ஒரு கையளவு புதினா மற்றும் துளசி இலைகளை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் கழுவ வேண்டும். 

இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சி அடைத்து, முகம் பிரகாசமாக இருக்கும்.


துளசி + எண்ணெய் = பொடுகுக்கு தீர்வு

தூசுகள், அழுக்குகள் தலையில் சேர்வதால் அது பொடுகாக மாறி விடுகிறது. இதனை சரி செய்ய துளசி எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கொண்டு தலையின் அடி வேரில் தடவி தலைக்கு குளித்தால், பொடுகு பிரச்சினை குண மாகும். 


Post a Comment

0Comments
Post a Comment (0)