இயற்கையாக நரைமுடியை கருப்பாக்க உதவும் மருதாணி ஹேர் டை

0



அனைவர்க்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.


அந்தவகையில், இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் மருதாணி ஹேர் டையை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். 




1. மருதாணி ஹேர்  டை

தேவையான பொருட்கள்

  • மருதாணி தூள்- 3 ஸ்பூன்
  • தண்ணீர்- சிறிதளவு

தயாரிக்கும் முறை

முதலில் அடுப்பில் தண்ணீர் வைத்து கொதித்ததும் அதில் மருதாணி தூள் சேர்த்து கிளறவும்.

அதை ஒரு இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் அப்படியே ஊறவைக்க வேண்டும்.  மறுநாள் காலையில் இதனை நன்கு கிளறி முடிகளுக்கு தடவவும்.

பின்னர் தலைமுடியை 3 மணி நேரம் பிளாஸ்டிக் கவர் கொண்டு தலைமுடியை மூடி பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.


2. மருதாணி + காபி பொடி

தேவையான பொருட்கள்

  • மருதாணி தூள்- 3 ஸ்பூன்
  • காபி பொடி- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் தண்ணீரில் காபி பொடி கலந்து கொதிக்கவைத்து வடிகட்டி ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் மருதாணி பொடியை காபியுடன் நன்கு கலந்து பேஸ்ட் போல நன்கு கலக்கவும்.

அடுத்து இதனை ஒரே இரவில் அப்படியே பாத்திரத்தில் வைத்து, பின் முடிக்கு தடவ வேண்டும்.

இறுதியாக இதனை 3 மணி நேரம் அப்படியே வைத்து, பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.

3. மருதாணி + எலுமிச்சை

தேவையான பொருட்கள்

  • மருதாணி தூள்- 3 ஸ்பூன்
  • தண்ணீர்- சிறிதளவு
  • எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள் மற்றும் தண்ணீரை சேர்த்து கலந்து எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.

பின் தலைமுடியில் நன்கு தடவி 3 மணி நேரம் அப்படியே வைத்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.  

4.  மருதாணி +நெல்லிமுள்ளி பொடி

தேவையான பொருட்கள்

மருதாணி- 2 கைப்பிடி

எலுமிச்சை- 1

தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

நெல்லிமுள்ளி பொடி- 2 ஸ்பூன்

தயிர்- 1 கப்


பயன்படுத்தும் முறை :

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்த மருதாணி இலையை நன்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, தேங்காய் எண்ணெய், நெல்லி முல்லி பொடி மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடிபோட்டு அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் நன்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்.  பின் ஒரு மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர நரைமுடி மறைந்து கூந்தல் கருப்பாக மாறும். 

Post a Comment

0Comments
Post a Comment (0)